• காதலின் பல வண்ணங்கள்

    காதலின் பல வண்ணங்கள்

    இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய கணத்தில் அவர்களுக்குள் காதல் பிறந்தது. விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் இசையின் கண்களை  நான் சந்தித்த கணத்தில் “இவரை பார்த்தா எம் எல் ஏ மாதிரி இருக்காரு. இவர் எப்படிக் கவிதை எழுதுவாரு” என்றுதான் லௌகீக சௌந்தராக முதலில்  நினைத்தேன். அவருக்கான விழா அமர்வில்,  அவர் பேசப்பேசவே வாசகன் சௌந்தராக, கவிஞர் இசையை இனம் கண்டு கொண்டேன். திருச்சிக்குப் போனால் தவறாமல்…

  • மழையில் நனையும் குதூகலம்

    மழையில் நனையும் குதூகலம்

    (08/01/2019-ல் எழுதிய வாசிப்பனுபவத்தின் மீள்பதிவு) நான் வாழ்வின் ஆதாரத் தேடுதலுக்காக பார்க்கும் மென்பொருள் உருவாக்கும் பணியில், எழுதிய மென்பொருள் நினைத்தபடி வேலை செய்கிறதா என்று  சுய பரிசோதனை (unit testing) செய்ய வேண்டும். அப்புறம் ஒரு கட்டமைப்பானா அடிப்படை சோதனைகளை (Smoke Testing) கடக்கிறதா என்று பார்க்கவேண்டும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மற்ற பயனர்கள்  பார்வையில் , எழுதியவன்  நினைத்து பார்க்காத சோதனைகளைகளையெல்லாம் (Regression testing) கடக்கவேண்டும்.  அதையும்…

  • ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    கிராமத்து வீட்டில் இருக்கும் நாட்களில் , காலை நடைக்குத் தயாரானால், ‘சாமி, பனி தலையில் இறங்கும்’ என்று அக்கா தடுத்துவிடுவார்கள். மாலை நடை மட்டும்தான். அப்பாவையும், அக்காவையும், குடும்பத்தையும் தெரிந்தவர்கள், எங்களை வழியில் நிறுத்திப் பேசுவார்கள். அப்பாவின் வார்த்தைகளில் உரம் பெற்று வாழ்க்கையை சுமுகமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு எங்களிடம்  சொல்வதற்கு நிறைய இருக்கும்.  வேறு யாரோ என்று எங்களை புரிந்துகொண்டு நலம் விசாரிப்பார்களும் உண்டு. பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகள் யாரென…

  • பாடுபொருள்களால் ஈர்த்தவர் – ரமேஷ் பிரேதன்

    பாடுபொருள்களால் ஈர்த்தவர் – ரமேஷ் பிரேதன்

    முப்பது நாற்பது வருடங்களாக எழுத்தையே தவமாகக் கொண்ட எழுத்தாளுமைகள்,  நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம் என்று தத்துவார்த்தமாக படைப்புகளை அலசும் விமர்சகர்கள், சுவாசிப்பதற்கு இணையாக வாசிக்கும் வாசகர்கள் உள்ள ஒரு கூடுகைவில் / விழாவில் இங்கு பேச அழைக்கப்பட்டிருக்கும் நான் யார் ? கடந்த ஏழு எட்டு வருடங்களாக, அமெரிக்காவிலிருந்து ஊர் வரும் சமயம் சுற்றம் , கோவில் குலதெய்வங்களை  பார்க்கும் வழமையிலிருந்து,  எழுத்தாளர்களை / ஆளுமைகளையும்…

  • யாதுமாகி

    யாதுமாகி

    தமிழில் தலைசிறந்த வாசகர்களில் ஒருவரான, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பாளர், விஜயா வேலாயுதம் முன்னெடுப்பில் கொடுக்கப்படும் ‘கி.ரா. விருது ’-விற்கு, தனியார் இலக்கிய அமைப்புகளால் தமிழ்  நாட்டிலிருந்து கொடுக்கப்படும் விருதுகளில் தலைமையான இடம் உண்டு . 2022-ஆம் வருடத்திற்கான, கி.ரா. விருது ,  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களில் ஒருவர், தமிழுக்கு செய்கிற சேவையை  பாராட்டும் பொருட்டும், அவர் தலைசிறந்த படைப்பாளியாக இருப்பதை குறித்தும் இந்த…

  • அரைப்படி சேர்த்துப் போடு

    அரைப்படி சேர்த்துப் போடு

    என் அம்மா பிறந்த ஊரில் , குத்தகைக்கு தோட்டம் பிடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால், ஊரே எல்லாம் என் தந்தையை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். அவர் குத்தகைக்கு எடுக்கவிருந்த தோட்டம் ஒன்றில், அதிகம் நடமாட்டமுள்ள பாதையின் அருகில் வீடு  இருந்தது. போவோர் வருவோர் எல்லாம், “மாப்பிள்ளை, நீ அந்தத் தோட்டத்தை குத்தைக்கு எடுத்தைனா, சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் பாத்துக்கோ” என்றார்கள். மண்ணின் தன்மையையும், நீர் வளத்தையும் மட்டும் பார்த்து ஒரு…

  • சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    எனக்குப் பெண்களைப் பிடிப்பல்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக என் வகுப்பில் படிக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை. பத்து வயதான நான் இப்படிச் சொன்னால், அம்மா, அதற்கு, இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படிச் சொல்கிறாயா என்று பார்க்கலாம் என்று குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள். எனக்கு அந்தக் குறுஞ்சிரிப்பின் அர்த்தம் புரிவதில்லை. கதை, என்னைப் பற்றியோ, எனக்குப் பெண்களைப் பிடிக்காததைப் பற்றியோ அல்லது என் அம்மாவின் கிண்டலைப்  பற்றியோ இல்லை. இந்தக் கதை, அங்கிள், ஆண்டி…

  • நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளில், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) சுவரில் எழுதியிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வௌவ்வால்கள் தொங்குவது போல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஜெனிஃபர் (ரேகா) டீச்சரைக் காதலித்த காலகட்டத்தில், நான் திருச்சி தேசியக் கல்லூரியில், முதுகலை இரண்டாம் வருடம்  படித்துக்கொண்டிருந்தேன்.  கல்லூரியின் வாசலில்,  வலது பக்கத்தில் இருக்கும் கோவிலில் பிள்ளையார் கிழக்குப் பார்த்து அமர்ந்திருப்பார். கல்லூரி வாசலுக்கு நேர் எதிரே இருந்த குடித்தனங்களின் சுற்றுச் சுவரில், கல்லூரியின் சுற்றுச் சுவரில் எனப்…

  • அம்மாவின் நம்பிக்கை

    அம்மாவின் நம்பிக்கை

    (மறு பிரசுரம்) “எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்” என்று இருப்பவன் நான். எல்லம்மாள் , எனது அம்மாவின் பெயர். இளங்கலை மூன்றாம் வருடம், கடைசித் தேர்வு. அந்தப் பாடத்தை , நான் எள்ளளவும் படித்ததில்லை. மற்ற தேர்வுகளுக்கும் அந்தக் கடைசி தேர்வுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அந்த மூன்று நாட்களில் , “எல்லாம் படித்துவிடலாம், என்ன பெரிய? “ என்று இருந்தேன். முதல் இரண்டு நாட்கள்,…

  • ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு

    ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு

    விருந்திற்குச் சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமோ, கேக்கோ கொடுத்து மேலும் உபசரிப்பை இனிமையாக்குவார்கள். கனடா தோழி இந்துமதி, அவர் வீட்டு விருந்து முடிந்து எங்களுக்குப் பரிமாறியது, ஆனந்த் குமார் கவி மனதுடன் படைத்துக் கொடுத்த ‘ப்ளம் கேக்’. இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கின்ற பிரியத்தையெல்லாம் பிரயோகித்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துளித் துளியெண உண் எனச் சொல்லும் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த நாள்தான் உன்…