-

யாதுமாகி
தமிழில் தலைசிறந்த வாசகர்களில் ஒருவரான, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பாளர், விஜயா வேலாயுதம் முன்னெடுப்பில் கொடுக்கப்படும் ‘கி.ரா. விருது ’-விற்கு, தனியார் இலக்கிய அமைப்புகளால் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்படும் விருதுகளில் தலைமையான இடம் உண்டு . 2022-ஆம் வருடத்திற்கான, கி.ரா. விருது , எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களில் ஒருவர், தமிழுக்கு செய்கிற சேவையை பாராட்டும் பொருட்டும், அவர் தலைசிறந்த படைப்பாளியாக இருப்பதை குறித்தும் இந்த…
-

அரைப்படி சேர்த்துப் போடு
என் அம்மா பிறந்த ஊரில் , குத்தகைக்கு தோட்டம் பிடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால், ஊரே எல்லாம் என் தந்தையை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். அவர் குத்தகைக்கு எடுக்கவிருந்த தோட்டம் ஒன்றில், அதிகம் நடமாட்டமுள்ள பாதையின் அருகில் வீடு இருந்தது. போவோர் வருவோர் எல்லாம், “மாப்பிள்ளை, நீ அந்தத் தோட்டத்தை குத்தைக்கு எடுத்தைனா, சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் பாத்துக்கோ” என்றார்கள். மண்ணின் தன்மையையும், நீர் வளத்தையும் மட்டும் பார்த்து ஒரு…
-

சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு
எனக்குப் பெண்களைப் பிடிப்பல்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக என் வகுப்பில் படிக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை. பத்து வயதான நான் இப்படிச் சொன்னால், அம்மா, அதற்கு, இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படிச் சொல்கிறாயா என்று பார்க்கலாம் என்று குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள். எனக்கு அந்தக் குறுஞ்சிரிப்பின் அர்த்தம் புரிவதில்லை. கதை, என்னைப் பற்றியோ, எனக்குப் பெண்களைப் பிடிக்காததைப் பற்றியோ அல்லது என் அம்மாவின் கிண்டலைப் பற்றியோ இல்லை. இந்தக் கதை, அங்கிள், ஆண்டி…
-

நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள்
பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளில், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) சுவரில் எழுதியிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வௌவ்வால்கள் தொங்குவது போல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஜெனிஃபர் (ரேகா) டீச்சரைக் காதலித்த காலகட்டத்தில், நான் திருச்சி தேசியக் கல்லூரியில், முதுகலை இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியின் வாசலில், வலது பக்கத்தில் இருக்கும் கோவிலில் பிள்ளையார் கிழக்குப் பார்த்து அமர்ந்திருப்பார். கல்லூரி வாசலுக்கு நேர் எதிரே இருந்த குடித்தனங்களின் சுற்றுச் சுவரில், கல்லூரியின் சுற்றுச் சுவரில் எனப்…
-

அம்மாவின் நம்பிக்கை
(மறு பிரசுரம்) “எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்” என்று இருப்பவன் நான். எல்லம்மாள் , எனது அம்மாவின் பெயர். இளங்கலை மூன்றாம் வருடம், கடைசித் தேர்வு. அந்தப் பாடத்தை , நான் எள்ளளவும் படித்ததில்லை. மற்ற தேர்வுகளுக்கும் அந்தக் கடைசி தேர்வுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அந்த மூன்று நாட்களில் , “எல்லாம் படித்துவிடலாம், என்ன பெரிய? “ என்று இருந்தேன். முதல் இரண்டு நாட்கள்,…
-

ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு
விருந்திற்குச் சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமோ, கேக்கோ கொடுத்து மேலும் உபசரிப்பை இனிமையாக்குவார்கள். கனடா தோழி இந்துமதி, அவர் வீட்டு விருந்து முடிந்து எங்களுக்குப் பரிமாறியது, ஆனந்த் குமார் கவி மனதுடன் படைத்துக் கொடுத்த ‘ப்ளம் கேக்’. இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கின்ற பிரியத்தையெல்லாம் பிரயோகித்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துளித் துளியெண உண் எனச் சொல்லும் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த நாள்தான் உன்…
-

புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருதைப் பெறும் கவிஞர் ரவிசுப்பிரமணியன் கனடா வந்துள்ளார். அவரை நண்பர்கள் சகிதமாக சென்று பார்க்கும் நிமித்தம் முன்னிட்டு ஒரு airbnb வீட்டை பதிவு செய்துவிட்டு, அந்த விலாசத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் “ஏன் சௌந்தர் , நான் செக்க கண்டனா சிவலிங்கத்த கண்டனா வாடான்னா வரப்போறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார். இதைப்போன்ற சொல்லாடல்கள் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வில் இல்லை. ஆங்கிலமும்,…
-

சக்தித் திருமகன் – திருப்தி
என்னதான் சினிமா ஆர்வலனாக இருந்தாலும், ஒரு சினிமாவை நான் பார்ப்பதற்குப் பொழுதுபோக்கைத் தாண்டி காரண காரியங்கள் வேண்டியதாக உள்ளது. பொழுதைப் போக்க என்னிடம் ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் உள்ளன. வாசித்து முடிக்கவேண்டிய புத்தகங்கள் வேறு வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அதென்ன ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் என்று கணக்குக் கேட்டால், அந்த எண்ணை எவ்வளவு பிரியமாகச் சொல்கிறேன் என்று கொஞ்சம் யோசித்தால் போதுமானது. செப்டம்பர் 19, 2025-ல் வெளிவந்த சக்தித் திருமகன்…
-

வணக்கம் தலைவி
அம்மா சமைத்துக்கொடுத்த இந்திய உணவை எடுத்துக்கொண்டு சென்று பள்ளியில் சாப்பிடும்பொழுது சக மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்ணேன்றால் அடங்கிப்போ என்று ஆதிக்கும் செலுத்தும் அப்பாவும் என வலிகளை சுமந்த வாழ்க்கையை மீட்டெடுத்தது இசையும் பாட்டும்தான் என்று சொல்லும் பாடகி வித்யா வாக்ஸின் பன்மொழி மாஸ் அப் பாடல்களை பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். “We don’t talk anymore” என்ற செலினா கோமஸ் பாடலை வித்யா வாக்ஸும், “பானி டா…
-

வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு)
சுழல் – 1: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து , பொறியியல் கல்லூரியா, கலை அறிவியல் கல்லூரியா என்று காத்திருந்த நாட்கள் அது. திண்டுக்கல்லில் பெரிய அண்ணன் ஒருவர் , “தம்பி, நம்ம திருச்சி MLA -கிட்ட சொல்லி, பொறியியல் கல்லூரியில் உனக்கு சீட் வாங்கிவிடலாம்” என்றார். அவரைப் பார்க்க சில காலை நேரங்களில் காத்துக்கிடந்திருக்கிறேன். காலங்கள் பல கடந்து, NIC-யில் வேலை பார்க்கும்பொழுது , அதே பெரிய அண்ணனின் பெரிய…